முதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 29, 2018, 12:55 [IST] தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும், முதல்வர் பழனிசாமி மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு யாரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, 'முதல்வர் பழனிசாமி பொறுப்பில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த வழக்கை முறையாக விசாரித்து இருக்காது' என, மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் நீதிபதி ரஞ்சன் கோகாய், எதிர் மனுதாரர்களான திமுகவிடம், ஒரு முக்கிய கேள்வி எழுப்பினார். அதாவது டெண்டரில் முறைகேடு நடந்தது என்றால், அந்த டெண்டரை ரத்து செய்யக் கோரி தானே புகாரை அளித்திருக்க வேண்டும். ஏன் மாநில முதல்வர் மீது புகாரை அளித்திருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி குறித்து விளக்கம் அளிக்குமாறு திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த கேள்விக்கு திமுக உரிய பதிலை அளித்தால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடைபெறும். தவறும் பட்சத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
|
காலை எழுந்தவுடன் தவளை! மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: 2020 பக்கங்கள்: 152 எடை: 150 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-81506-36-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உங்களுடைய ‘செய்யப்பட வேண்டிய வேலைகள்’ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி, அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். அவர்கள் முதலில் தங்கள் தவளைகளை உட்கொண்டு விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக, உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் உட்கொண்டுவிட்டால், அன்று அதை விட மோசமான வேறு எதுவொன்றையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்ற நிம்மதியோடு உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் உங்களால் வேலை செய்ய முடியும் என்ற பழைய கூற்று ஒன்று உள்ளது. உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்ற, ஆனால் உங்கள் வாழ்வின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தைக் கையாள்வதைக் குறிப்பதற்கு, ‘ஒரு தவளையை உட்கொள்வது’ என்ற உருவகத்தை பிரையன் டிரேசி இந்நூலில் பயன்படுத்துகிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|