தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 7, 2018, 16:00 [IST] வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வங்கக்கடலில் அந்தமான் கடல்பகுதி மற்றும் அதை ஓட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கு திசையில் 920 கி.மீ.தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. அது புயலாக வலுப்பெற்று ஓமன் கரை நோக்கி நகரக்கூடும். இது அடுத்து வரும் 3 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கரை நோக்கி நகரக்கூடும். மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் அக்.7 முதல் 12 –ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக்கடலில் மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதியில் அக்.7 முதல் 9ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசையில் 13 செ.மீ. மழையும் நெல்லை சங்கரன்கோவில், குன்னூர், அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ.மழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், குமரி, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய நிலைவரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நாளை விரிவாக கூறப்படும்.” என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். முன்னதாக இவ்வார ஆரம்பத்தில் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இந்த ரெட் அலெர்ட் வாபஸ் வாங்கப்பட்டது.
|
வெயிலைக் கொண்டு வாருங்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 184 எடை: 220 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வாழ்வின் பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு, நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய சிறுகதைகளின் வழியே எஸ்ரா புனைவின் புதிய சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|