சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 27, 2018, 15:30 [IST] கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆந்திர தொழிலதிபரான தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், பழங்கால ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமயத்தில் தீனதயாளனின் கூட்டாளி என்று கருதப்பட்ட சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான புராதான சிலைகள், ஓவியங்கள் இருந்தது. ஆனால் அப்போது அந்த சிலைகள் கடத்தப்பட்டவை என்று கருதுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணை பெற்று, ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தினர். பழமையான கோயில்களின் தூண்கள் மற்றும் சிலைகள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்டவை என்று உறுதிபடத் தெரிவிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன் தெரிவித்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட் சிலைகளின் மதிப்பு 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும் அவர் கூறினார். அப்போது பேசிய ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டதாக தெரிவித்தார். கடத்தல் சிலைகள் கைப்பற்றப்பட்டால் அவற்றை எடுத்துச் செல்ல தங்கள் சொந்த பணத்தையே செலவு செய்து பின்னர் தமிழக அரசிடம் வாங்கிக் கொள்ளும் நிலை உள்ளதாகவும் பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டார். ரன்வீர் ஷா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் உள்ளிட்டவை கிரேன் உள்ளிட்டவை மூலம் லாரியில் ஏற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மின்சாரக் கனவு படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ரன்வீர் ஷா. இப்படத்தில் உள்ளாடை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபராக, நடிகை கஜோலை பெண் பார்க்க வரும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|