விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 20, 2018, 17:25 [IST] மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீரா பாய் சானு ஆகிய வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளம் நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விருதுகள் செப்டம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விராட் கோலி (கிரிக்கெட்) மீராபாய் சானு (பளு தூக்குதல்) 1. சுபேதார் குட்டப்பா (குத்துச்சண்டை) 2. விஜய் சர்மா (பளு தூக்குதல்) 3. ஸ்ரீனிவாச ராவ் (டேபிள் டென்னிஸ்) 4. சுக்தேவ் சிங் பன்னு (தடகளம்) 5. கிளாரன்ஸ் லோபோ (ஹாக்கி, வாழ்நாள் பங்களிப்பு) 6. டரக் சின்ஹா (கிரிக்கெட், வாழ்நாள் பங்களிப்பு) 7. ஜிவான் குமார் சர்மா (ஜூடோ, வாழ்நாள் பங்களிப்பு) 8. வி.ஆர். பீடு (தடகளம், வாழ்நாள் பங்களிப்பு) 1. நீரஜ் சோப்ரா (தடகளம்) 2. ஜின்ஸன் ஜான்ஸன் (தடகளம்) 3. ஹிமா தாஸ் (தடகளம்) 4. சிக்கி ரெட்டி (பாட்மிண்டன்) 5. சதீஷ் குமார் (குத்துச்சண்டை) 6. ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்) 7. சுபாங்கர் சர்மா (கோல்ஃப்) 8. மன்ப்ரீத் சிங் (ஹாக்கி) 9. சவிதா (ஹாக்கி) 10. ரவி ராத்தோர் (போலோ) 11. ரஹி சர்னோபத் (துப்பாக்கிச் சுடுதல்) 12. அன்குர் மிட்டல் (துப்பாக்கிச் சுடுதல்) 13. ஸ்ரேயாசி சிங் (துப்பாக்கிச் சுடுதல்) 14. மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) 15. சத்யன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்) 16. ரோஹன் போபன்னா (டென்னிஸ்) 17. சுமித் (மல்யுத்தம்) 18. பூஜா கடியன் (வுஷு) 19. அன்குர் தாமா (பாரா- தடகளம்) 20. மனோஜ் சர்கார் (பாரா - பாட்மிண்டன்) தயான் சந்த் விருது 1. சத்யதேவ் பிரசாத் (வில்வித்தை) 2. பாரத் குமார் சேத்ரி (ஹாக்கி) 3. பாபி அலோசியஸ் (தடகளம்) 4. சௌகலே டடு தத்தாத்ரே (மல்யுத்தம்)
|
மலைக்காடு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 256 எடை: 300 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-81-8493-939-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாகப் பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைளாகவும் இருமுகம்கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள். அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது. - ஜெயமோகன் நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|