ராஜிவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 9, 2018, 19:45 [IST] முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மாலை 4 மணி அளவில் துவங்கி சுமார் 2 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பிறகு தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரண்டாவதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
மக்களைக் கையாளும் திறன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: மே 2015 பக்கங்கள்: 68 எடை: 100 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-87383-38-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 95.00 தள்ளுபடி விலை: ரூ. 85.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|