ராஜிவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 6, 2018, 15:45 [IST] கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார். இந்நிலையில் கருணை அடிப்படையில் எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.ஆனால் எழுவரை விடுவிக்க மறுத்த மத்திய அரசு, அதற்கான கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:- "ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம். இது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம். எனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது." இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
பண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2009 பக்கங்கள்: 120 எடை: 150 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-82577-15-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 81.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தொழில் செய்பவர்கள்தான் கோடீஸ்வரராகலாம் என்பது அந்தக் காலம். மாதச் சம்பளக்காரர்களாயிருந்தாலும் பணத்தைச் சரியாக நிர்வகிக்க அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களும் நாளைக்கு ஒரு கோடீஸ்வரர்தான்.அதனால்... நீங்கள் இதுவரைக் கேள்விபட்டிராத ஓர் ஒழுக்கம் பற்றி, பண ஒழுக்கம் பற்றி இந்த நூலில் சொல்லி இருக்கிறோம். நாங்கள் சொல்வது நேர்மையான வழி. நிம்மதியான வழியும்கூட. பணம் சேர்ப்பது என்பது அப்படியொன்றும் மாபெரும் கடினமான பணி அல்ல. இதற்கு நீங்கள் பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டியது இல்லை. இந்த நூல் சொல்லும் வழியில் சென்றால் நீங்கள் நினைத்ததை அடையலாம்.எல்லோருடைய ஆசையும் பணக்காரராக வேண்டும் என்பதாக இருந்தாலும் பெரும்பாலோர் பணத்தை நேர்மையான வழியில் அடைய வேண்டும் என்று நினைப்பதில்லை.தங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தைச் சம்பாதிக்கவும் அப்படிச் சம்பாதித்துச் சேர்த்த பணத்தைச் சேமிக்கவும் தெரியாமல் வறுமையில் உழல்பவர்கள் நிறையப்பேர். இவர்களுக்குப் பணம் ஓர் எட்டாக் கனி. ஆனால் சிலர் மட்டும் தாங்கள் விரும்பிய பணத்தை எப்பாடுபட்டாவது சேர்த்து விடுவார்கள். அவர்களுக்கு மட்டும் அது சாத்தியமாகிறது என்கிறபோது உங்களுக்கும் அது சாத்தியமானதுதான்.எல்லாருக்கும்தான் பணம் தேவைப்படுகிறது. அதுவும் கொஞ்சமாக இல்லை. ஏராளமாக... நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|