கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து: ஒருவர் பலி, 19 பேர் காயம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 4, 2018, 20:35 [IST] ரயில் தண்டவாளத்தின் மேல்பகுதியில் இந்த பாலம் இருக்கிறது. விபத்து நடந்த போது பாலத்தின் மீது சென்ற வாகனங்களும் சிக்கியுள்ளன. பாலம் இரண்டடுக்கு பாலமாகும், பாலத்தின் மேற்குப்பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர், மீட்புப்படையினர் போலீஸார் ஆகியோர் இணைந்து, மீட்புப்பணியல் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு புதிய பாலத்தினை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மற்றும் 24 பர்கானா மாவட்டத்திற்கு இடையேயான ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஏப்ரல் 2016-ல் கொல்கத்தாவில் கட்டுமானத்தில் இருந்த விவேகானந்தா மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியானது நினைவிருக்கலாம். இதில் 100 பேர் காயமடைந்தனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|