பாஜகவுக்கு எதிராக கோஷம்: கைதான சோபியா ஜாமீனில் விடுதலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 4, 2018, 20:00 [IST] தூத்துக்குடி விமானத்தில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் பயணம் செய்த தூத்துக்குடி மாணவி சோபியா, தமிழிசை செளந்தரராஜனை நோக்கி, ‘பாசிச பா.ஜ.க ஒழிக’ எனக் கோஷமிட்டதற்காக, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். சோபியாவை , 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கொக்கிரகுளம் மகளிர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சோபியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே,. சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, உத்தரவிட்டதால், மாலையில், மருத்துவமனையில் இருந்து அவர் விடுதலையானார். அவரை வரவேற்க பல ஆயிரம் பேர் திரண்டு விட்டனர். அத்தனை பேரும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டபடி சோபியாவை வரவேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த சாமி - மனோகரி தம்பதியினர் மகள் தான் சோபியா. சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும், தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்தும் ஓய்வு பெற்றவர்கள். சோபியா பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்தார். ஜெர்மனியில் M.Sc., இயற்பியல் படிப்பை படித்தார். கனடாவில் M.Sc. கணிதம் முடித்து விட்டு, தற்போது கனடாவின் மான்ட்ரியல் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|