சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 1, 2018, 08:35 [IST] சேலம் சந்தையில் இருந்து பெங்களூரு சந்தைக்கு பூக்கள் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் அருகே சென்ற போது, அதிகாலை 1.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அப்போது பின்னால் வந்த சேலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பேருந்து நிலை தடுமாறி, எதிர்ப்புற சாலைக்கு சென்று, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 37 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான மழை காரணமாக மீட்பு பணியில் சற்று தாமதம் ஆனது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் விபத்துக்கு ஆளான வாகனங்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, விபத்து நடந்த இடத்தை அதிகாலை வேளையில் நேரில் ஆய்வு செய்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|