தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 1, 2018, 08:20 [IST] விஜயகாந்த் உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அவ்வப்போது அமெரிக்கா செல்வது வழக்கம். அவர் சமீபத்தில் தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று இரவு (31-08-2018) உடல் நல குறைவால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (சனிக்கிழமை) அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|