ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 29, 2018, 19:30 [IST] ஆந்திர மாநில நெல்லூர் மாவட்டத்தில் தனது ரசிகரின் திருமணத்துக்குச் செல்ல, ஹரிகிருஷ்ணாவே காரை ஓட்டிச் சென்றார். அப்போது தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் காரில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 61. ஐதராபாத் நகரின் அருகே முருதுழகுடா பகுதியில் உள்ள என்.டி.ஆர். குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை (வியாழக்கிழமை, 30-08-2018) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ள ஹரிகிருஷ்ணாவின் இறுதி யாத்திரை அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஹரி கிருஷ்ணா, நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான இவர், தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார். ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகி ராம், கடந்த 2014 -ம் ஆண்டு நடந்த விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 மார்ச்சில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் கார் விபத்தில் சிக்கி மிகப்பெரிய காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|