மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 29, 2018, 19:00 [IST] கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது, 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜூலை மாதம் முன்தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் அரசு ஊழியர்கள், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,112.20 கோடி செலவாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|