சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 7, 2018, 13:35 [IST] ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைக் கடத்தல் வழக்குகளையும் விசாரிக்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற குழுவை அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சிறப்பு வழக்கறிஞர் கூறும்போது, “தமிழக அரசின் அரசாணை, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இல்லை. முன்னதாக கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்வார். சிலைக் கடத்தல் தொடர்பான புதிய வழக்குகளை மட்டும் சி.பி.ஐ விசாரிக்கட்டும் என்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு” எனக் கூறினார். இதையடுத்து இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு ஒரே நாளில் மாற்றிய நிலையில், ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாதது ஏன்? ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் உத்தரவு ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி, தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
|
முடிசூடா மன்னர் மொழிபெயர்ப்பாளர்: முனைவர் கௌரி சிவராமன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2016 பக்கங்கள்: 280 எடை: 280 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8495-235-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 215.00 தள்ளுபடி விலை: ரூ. 195.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம் நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|