திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 6, 2018, 18:35 [IST] தங்கக் கடத்தலில் இந்தியாவிலேயே திருச்சி விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. இந்த தங்க கடத்தலில் விமான நிலைய ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், சிபிஐ போலீசார் நேற்று (5-8-2018) அதிரடி ஆய்வில் இறங்கினர். இன்று திங்கட்கிழமை தொடர்ந்து நடந்த 70 பேரிடம் சிபிஐ சோதனை மற்றும் விசாரணை முடிவில் 19 பேர் கைது செய்யப்பட்டனர், பயணிகளிடமிருந்து அதிகாரிகள் பெற்ற லஞ்சப் பணம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரி ஃப்ரெட்டி எட்வர்ட் அறையில் இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தங்கக் கட்டிகளும், தங்க நகைகளும் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 6 அதிகாரிகள் விவரம் வருமாறு: 1. சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு 2. கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் 3. எட்வர்ட் 4. மூர்த்தி 5. அனீஸ்பாத்திமா 6. பிரசாந்த் கவுதம் அப்துல் ரமீஸ், மகேஸ்வரன், சுரேஷ், தேவகுமார், மனோகரன் முத்துகுமார், முருகேஷ் ஆகிய பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மகேஸ்வரன் மற்றும் சுரேஷ் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். தமயந்தி, கனகா, சாந்தி, லட்சுமி, ராமலட்சுமி, வள்ளி, புஷ்பா, ஆகிய 7 பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
மேகமூட்டம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2006 பக்கங்கள்: 152 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-81-88641-97-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 85.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|