சென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 24, 2018, 15:35 [IST] சென்னை மாம்பலம் கோடம்பாக்கம் இடையே இன்று மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், குறைவான எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் அந்த ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பலரும் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். ரயில் எண் 40701 கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு பரங்கிமலை ரயில் நிலையத்தை அடைந்த போது படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் தடுப்புச் சுவரில் மோதி அடிபட்டு கீழே விழுந்தனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இறந்தவர்கள் கல்லூரி மாணவர் பிரவீன்குமார், பள்ளி மாணவர் பரத், சிவக்குமார், சங்கர் மற்றும் பாரதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், படிக்கட்டில் பயணித்ததே உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து நடந்ததால், தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என கோரியுள்ளோம். பயணிகள், படிக்கட்டில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|