மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 12, 2018, 12:35 [IST] சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மைய கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து பேசினார். அப்போது மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். மக்கள் நீதி மையம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அப்போது கமல்ஹாசன் தெரிவித்தார். கட்சியின் நிர்வாகிகள் பெயரையும் அவர் வெளியிட்டார். கட்சியின் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார். கட்சியின் துணைத் தலைவராக ஞானசம்பந்தனும், பொதுச் செயலாளராக அருணாசலமும், பொருளாளராக சுரேஷும் செயல்படுவார்கள் என கமல் தெரிவித்தார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீப்ரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், மவுரியா, குமரவேல், சவுரிராஜன், ஆர்.ரங்கராஜன், ஆர்.தங்கவேலு, மூர்த்தி ஆகியோர் செயல்படுவார்கள் என கமல் அறிவித்தார். இதையடுத்து முன்னர் அறிவிக்கப்பட்ட கட்சியின உயர்மட்ட குழு கலைக்கப்படுகிறது. மேலும் வடக்கு மண்டல கட்சி நிர்வாகிகள் பெயரையும் கமல் இன்று அறிவித்தார். அம்பத்தூர் ஆவடி - முஷ்டாக் அலி திருத்தணி, திருவள்ளூர் - என்.லோகரங்கன் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி - டி.தேசிங்குராஜன் மாதவரம், திருவொற்றியூர் - எஸ்.டி.மோகன் பூந்தமல்லி, மதுரவாயல் - எம்.அருணாசலம் துறைமுகம், எழும்பூர் - கோமகன்.சி டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், ராயபுரம் - மாறன்.டி வில்லிவாக்கம், பெரம்பூர் - உதயகுமார் குளத்தூர், திரு.வி.க.நகர் - ப்ரியதர்ஷிணி.யூ அண்ணாநகர், விருகம்பாக்கம் - டி.சண்முகசுந்தரம் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் - சி.கிருபாகரன் ஆயிரம்விளக்கு, தியாகராய நகர் - கே.ஏழுமலை சைதாப்பேட்டை, வேளச்சேரி - டி.சுபாஷ்சந்தர் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் - எஸ்.தீனதயாளன் சோழிங்கநல்லூர், திருப்போரூர் - எம்.ஆர்.ராஜீவ்குமார் ஆலந்தூர், பல்லாவரம் - பி.கே.மணிவண்ணன் செங்கல்பட்டு, தாம்பரம் - டாக்டர் பாலசந்திரன் செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர் - ராம ராஜேந்திரன் காட்பாடி, ஆற்காடு, வேலூர் - ஜி.சத்யநாராயணன் ஆம்பூர், அணைக்கட்டு - எஸ்.சிவக்கொழுந்து கே.வி.புரம், குடியாத்தம் - பி.ராஜா அரக்கோணம், சோழிங்கர், ராணிபேட்டை - ஆர்.சுரேஷ் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி - எச்.அப்துல்கரீம் செய்யாறு, வந்தவாசி - எஸ்.சுரேஷ் செங்கம், கலசபாக்கம் - எம்.நாகராஜன் ஆரணி, போளூர் - ஏ.ரஞ்சித்குமார் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் - ஆர். அருள் விழுப்புரம், விக்கிரவாண்டி - பி.பாபு வானூர், திண்டிவனம் - வி.சாவி செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் - ஆர்.ஸ்ரீபதி சங்கராபுரம், கள்ளக்குறிச்சி - கே.கணேஷ் சிதம்புரம், குறிஞ்சிப்பாடி - எஸ்.சரவணன் காட்டுமன்னார்கோயில், புவனகிரி - டி.கே.மூர்த்தி திட்டக்குடி, விருதாசலம் - முகம்மது ரஃபீக் நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் - டி.வெங்கடேசன்
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|