காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 23, 2018, 07:55 [IST] காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஜூன் 1ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைமையகம் புதுதில்லியில் செயல்படும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பகுதி நேர உறுப்பினர்களாக மத்திய நீர் வளத் துறையின் இணைச் செயலர், மத்திய வேளாண்மைத் துறையின் ஆணையர், மத்திய வேளாண்மை துறையின் இணைச் செயலார், கர்நாடக மாநில நீர் வளத்துறை நிர்வாகச் செயலாளர், கேரள நீர் வளத்துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஆணையரும், செயலருமான ஏ.அன்பரசு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணைய செயலராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளரான ஏ.எஸ்.கோயல் செயல்படுவார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுtஹ் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பை இவர் கூடுதலாக கவனிப்பார். உறுப்பினர்களாக கர்நாடக மாநில நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் (பெயர் அறிவிக்கப்படவில்லை), கேரள தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி, புதுச்சேரி பொதுப்பணித் துறைத் தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார், இந்திய வானியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் எம்.மொஹபத்ரா, சி.எஸ்.ஆர்.ஓ.வின் தலைமைப் பொறியாளர் கிருஷ்ண உண்ணி, மத்திய வேளாண்மைத் துறையின் தோட்டக்கலை ஆணையர், குழுவின் உறுப்பினர் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|