காஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 19, 2018, 17:00 [IST] காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முஃப்தி முகமது சயீத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு அவர் மரணம் அடைந்ததை அடுத்து, மெஹபூபா முஃப்தி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மெஹபூபா முஃப்தி அரசுக்கு, அளித்த ஆதரவைத் திரும்ப பெறுவதாகப் பா.ஜ.க இன்று திடீரென அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காஷ்மீர் மாநிலப் பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ், “காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், காஷ்மீரில் அண்மைக்காலமாகப் பயங்கரவாதம், பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியைப் பா.ஜ.க வாபஸ் பெறுகிறது” என்று கூறினார். பாஜக இந்த முடிவை அறிவித்த உடனேயே காஷ்மீர் முதல்வர் பதவியை மெகபூபா முஃப்தி ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். 87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28, பா.ஜ.க-வுக்கு 25 தேசிய மாநாடு கட்சிக்கு 15 மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ-க்களில் ஆதரவு தேவை.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|