மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 14, 2018, 15:20 [IST] கடந்த 2017ம் ஆண்டு மே 27ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் கல்வியில் சிறந்த பின்னணி கொண்டிருக்க வேண்டும் மற்றும் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது என சந்தேகம் எழுப்பப்பட்டது. அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த சூழ்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்து. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய தேர்வுக்குழுவை அமைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|