18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 14, 2018, 14:25 [IST] முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தர், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் 3-வது நீதிபதி பெஞ்சுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது. அந்த 3வது நீதிபதி யார் என்பது இனிமேல்தான் முடிவு செய்யப்படும். தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த 18 தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|