மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 13, 2018, 18:40 [IST] மும்பை வோர்லி பகுதியில் முக்கோண வடிவத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் பெயர் பியூமவுண்ட். ஒரு கட்டடம் முக்கோண வடிவிலும், மற்றொரு கட்டடம் தலைகீழ் முக்கோண வடிவிலும் இருக்கும் இந்த கட்டடத்தில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பின் பி பிளாக்கில் 33-வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்கை லிஃப்ட் என்ற உயர் ரக ஹைட்ராலிக் ஏணியும் வரவழைக்கப்பட்டு குடியிருப்பில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 தீயணைப்பு வண்டிகள், 5 ஜம்போ டாங்கர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இக்குடியிருப்பின் 26-வது மாடியில் நடிகை தீபிகா படுகோன் வீடு உள்ளது. மேலும் பல திரையுலக பிரபலங்களும் இதே குடியிருப்பில் வசிக்கின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|