நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 13, 2018, 08:35 [IST] நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. மொழியாக்கத்தில் பிழை, தேர்வு முடிவுக்கு முந்தைய பிந்தைய மாணவர்கள் எண்ணிக்கையில் மாற்றம், தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வுமையம் ஒதுக்கியது, தேர்வு முடிவு வெளியானதில் குழப்பம் என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இனி வரும் காலங்களில் நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தாது எனவும், தேசிய தேர்வு முனையம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்ததுபோல் அல்லாமல், அடுத்த ஆண்டுமுதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தவும் பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவரை இந்த ஆண்டு தேர்வு முடிவுகளால் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|