பல்சுவை இணைய இதழ்
  


தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 08, 2018, 05:05 [IST]

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் வியாழக்கிழமை (07-06-2018) முதல் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பொழியும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று (07-06-2018) தமிழக மழை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அடுத்த 10 தினங்களுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலானமேற்கு கடற்கரையின் உச்சி முதல் அடிமட்டம் வரையிலான பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் இன்று முதல் தென் மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக கோவை மாவட்டம்(வால்பாறை), நீலகிரி மாவட்டம், தேனி(பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள்), கன்னியாகுமரி(பேச்சிப்பாறை மண்டலம்), நெல்லை(மாஞ்சோலை முதல் பாபநாசம் வரை) ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.

வால்பாறை, நீலகிரி மலைப்பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு குறிப்பாக கனமழை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். ஒரு சில நாட்களுக்கு மிக, மிக கனமழை இருக்கும். சின்னக்கல்லாறு,தேவலா, அப்பர் பவானி, சோலையாறு, பரம்பிக்குளம் உள்பட மேலும் சில பகுதிகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் ஈரோடு சத்தியமங்கலம், திண்டுக்கல் கொடைக்கானல் மலைப்பகுதி, பொள்ளாச்சி மலைப்பகுதி ஆகியவற்றில் மிதமான மழை பெய்யக்கூடும்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு மலைப்பகுதி, வயநாடு(கபினி), மூணாறு, வால்பாறை, கோவா, மகாபலேஸ்வர், கர்நாடக கடற்கரைப்பகுதி, மலைப்பகுதிகள் ஆகியவற்றுக்கு சுற்றுலா செல்லதிட்டமிட்டு இருந்தால், அதை சற்று தள்ளிப்போட்டுக் கொள்ளவும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 1500 மிமீ மழைகூட பெய்யலாம். கவனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

மும்பையில் இன்று முதல் மழை தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் மும்பையில் மழை தீவிரமடையும். நகர்புறங்களில் சில நேரங்களில் தொடர்ந்து இடைவிடாது பெய்யலாம், வானத்தை கிழித்துக்கொண்டு மழை பெய்தது போன்று பெய்யலாம். மும்பைக்கும் ரத்னகிரி, மங்களூரு, கோழிக்கோடு பகுதிகளில் மிக கனமழை இருக்கும். அடுத்து வரும் நாட்களில் மங்களூரு நகரில் அதிகமான மிக கனமழை இருக்கும். கோவாவில் மழை மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், சுற்றுலா செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

மஹாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், மலைப்பகுதிகளிலும் பயணிப்பதை தவிர்க்கலாம். தமிழகத்திலும் ஒரு சில மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா திட்டமிட்டு இருந்தால், 10 நாட்களுக்கு தள்ளிப்போடவும்.

இவ்வாறு பிரதிப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக மழை குறித்த அறிவிப்புகளை தனது சொந்த விருப்பத்தின் பேரில் துள்ளியமாகவும் தெளிவாகவும், மக்களுக்கு புரியும் வகையிலும் பிரதிப்ஜான் பதிவிட்டு வருகிறார். இதனால் பொதுமக்கள் பலரும் அவரது மழைப் பதிவுகளை விரும்பி அவரின் பேஸ்புக் பக்கத்தில் அங்கத்தினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்
செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
சாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு
மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு
மோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்
வழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு
அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி




மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

கேரளத்தில் எங்கோ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

The Monk Who Sold His Ferrari
Stock Available
ரூ.205.00
Buy

அவரவர் பாடு
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

ஏழு தலை நகரம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உடல் பால் பொருள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ஆலவாயன் அர்த்தநாரி
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

சிறுதானிய ரெசிப்பி
இருப்பு இல்லை
ரூ.180.00
Buy

அச்சம் தவிர்... ஆளுமை கொள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சபாஷ் சாணக்கியா பாகம்-II
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

அசுரகணம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சாயங்கால மேகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இறுதி இரவு
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சத்திய சோதனை
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

சபாஷ் சாணக்கியா
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

ராக்ஃபெல்லர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

திறந்திடு சீஸேம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)