ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 28, 2018, 21:50 [IST] 100 நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-ஆவது நாளின்போது (22-05-2018) ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சோக சம்பவம் நிகழ்ந்து 8 நாட்களுக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் ஆலையை மூட வேண்டும் என்ற அரசாணையை ஆலை கேட்டில் அதிகாரிகள் ஒட்டினர். பின்பு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 100 நாட்களாக போராடி 13 உயிர்களை பலி கொடுத்த பிறகு மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் இது. இதை முன்னரே செய்திருந்தால் 13 உயிர்கள் பலியாகியிருக்காது. தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. புதுப்பித்தல் விண்ணப்பத்தை 9-4-2018 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.
|
இனிப்பு நோயின் கசப்பு முகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2011 பக்கங்கள்: 96 எடை: 150 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: 978-93-81134-18-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 50.00 தள்ளுபடி விலை: ரூ. 45.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இனிப்பு நோயின் கசப்பு முகம் எனும் இந்த நூலில் சர்க்கரை நோ குறித்தும், நோய் கண்டறிதல் மற்றும் சமாளிப்பு குறித்த வழிமுறைகளையும், தன்கவனிப்புக் குறிப்புகளையும் காண்பீர்கள். சர்க்கரை நோயானது எவ்வாறு பிற உறுப்புகளின் பாதிப்புகளுக்கும் இட்டுச் செல்லும் என்பது குறித்தும், அத்தகைய அபாயங்களைக் குறைப்பது குறித்தும் அறிந்து கொள்வீர்கள். இந்த நூலின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளும் தகவல்கள் உங்களை நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|