கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 28, 2018, 08:50 [IST] கர்நாடக மாநிலம் ஜாம்கண்டி தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் சித்துநைமா கவுடா. இவர் கோவாவிலிருந்து பாகல்கோட்டிற்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கவுடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த எம்.எல்.ஏ. சித்துநைமா கவுடாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜாம்கண்டி தொகுதியில் சித்துநைமா கவுடா பாஜகவின் ஸ்ரீகாந்த்குல்கர்ணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். சித்துநைமா கவுடா 49,245 வாக்குகளும் குல்கர்ணி 46,450 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
|
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள் மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஆகஸ்டு 2019 பக்கங்கள்: 268 எடை: 300 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-93-8914-326-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்? ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன? ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஸ்டீவ் ஜாப்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ரைட் சகோதரர்கள் ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர். பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|