தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 24, 2018, 09:10 [IST] தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக 100 நாள் அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் போராடி வந்தனர். 100வது நாள் (22-05-2018) நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாகச் சென்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். பின்னர் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, ஸ்நைப்பர் வகை துப்பாக்கியால் குறி வைத்து போலீசார் சரமாரியாகச் சுட்டதில் 11 பேர் உயிரழந்தனர். இரண்டாம் நாளாக நேற்று புதன்கிழமையும் (23-05-2018) காவல்துறையின் தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தில் ஒருவரை சுட்டுக் கொன்று அவரை தரதரவென்று இழுத்து வந்தனர். இந்த வீடியோ பார்த்தவர் அனைவரின் இதயம் நொறுங்கியது. இறந்த இளைஞனை காவல்துறையினர் எள்ளி நகையாடுவதும், கொஞ்சம் கூட மனிதாபமில்லாமல் ஒரு காலை பிடித்து சாலையில் தரதரவென்று இழுத்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இவ்வளவும் நடந்த பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசு கண்டும் காணாமல் இருந்தது. திடீரென்று ஆளுநர் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினார். அதையடுத்து முதல்வர், துணைமுதல்வர், தலைமைச்செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேசினர். அதற்கு முன்பு கண் துடைப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் ஆகியோருக்கு உலகிலேயே மிகவும் கொடூர தண்டனையான இடமாற்றம் செய்யப்பட்டது. மற்றும் ஒரு காலம் கடந்த கண் துடைப்பு நடவடிக்கையாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலை 5.15 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் 2வது அலகின் விரிவாக்க பணிகளுக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|