பல்சுவை இணைய இதழ்
  


கர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 23, 2018, 18:00 [IST]

பெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி இன்று (23-05-2018) பதவியேற்றுக் கொண்டார்.

இந்த மாதம் 12ம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 15ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அதை ஏற்று குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆளுநர் வஜுபாய் வாலா 104 இடங்களை பெற்ற பாஜக தலைவர் எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 19ம் தேதி சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின் ஆளுநர் காங்கிரஸ் ஆதரவு பெற்ற மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைத்தார்.

இதையடுத்து இன்று பெங்களூரு விதானா சவுதாவில் நடந்த விழாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். கூட்டணி மந்திரி சபையில் 22 பேர் காங்கிரசில் இருந்தும் 12 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்தும் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் குமார் இருப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழாவில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, சரத் பவார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குமாரசாமி இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னர் பாஜக ஆதரவுடன் அவர் முதல்வராக பதவி வகித்தார்.

பிற செய்திகள்










தண்ணீர் தேசம்
ஆசிரியர்: வைரமுத்து
வகைப்பாடு : கவிதை
விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 185.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

ராஜாஜியின் பகவத்கீதை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தடை... அதை உடை...
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

உள்ளுணர்வின் கருமையம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)