தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 23, 2018, 17:00 [IST] ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது நேற்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகரில் இன்று காலை மீண்டும் கூடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களும் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக காவல்துறையினர் இன்றும் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காளியப்பன் (22) என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிற மாநிலம் நிராகரித்த நச்சு தன்மையை வெளியிடும் ஒரு தனியார் ஆலைக்கு ஆதரவாகவும், அந்த ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற போராடும் மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வரும் தமிழக அரசுக்கு எதிராக நடுநிலையான மக்களும் கொதித்து எழும் நிலையை அரசு உருவாக்கி வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|