பல்சுவை இணைய இதழ்
  


தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 22, 2018, 16:20 [IST]

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இன்று 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கல்வீச்சில் காவல்துறையினர் 20 பேர் உட்பட 65 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் 17 வயது மாணவி வெனிஸ்டாவும் ஒருவர். இவர் வாயில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். பலியானவர்களில், உசிலம்பட்டி ஜெயராமன் (55), தாமோதர் நகர் மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன் (28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா (55), அந்தோணி ராஜ், ஆகியோரும் அடங்குவர்.

துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்கங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிற செய்திகள்










ஆன்லைன் ராஜா
ஆசிரியர்: எஸ்.எல்.வி. மூர்த்தி
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 175.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)