கர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 18, 2018, 12:20 [IST] கர்நாடாகவில் நடந்த முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 78 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியும், 38 தொகுதியில் வென்ற மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. 104 இடங்களில் வென்ற பாஜகவும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். இதையடுத்து பாஜகவின் எடியூரப்பா நேற்று வியாழக்கிழமை காலை கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழங்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரின் வாதத்தைக் கேட்ட உச்சநீதிமன்ற அமர்வு, இறுதியாக நாளை சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய ஓட்டெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினரை நியமிக்கவும் உச்சநீதிமன்ற தடை விதித்துள்ளது. மேலும் முதலமைச்சர் எடியூரப்பா, நாளை வாக்கெடுப்பு நடைபெறும் வரை எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|