கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 17, 2018, 12:20 [IST] கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மாறாக பாஜக கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பாஜக கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்தார். ஆளுநரின் இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ் மஜத கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், நீதிமன்றம் காலை திறக்கும் முன்பே, எடியூரப்பா பதவியேற்கவுள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த வழக்கு விசாரணையில், காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக வாதாடினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்றும், இது குறித்து அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி முழுமையாக விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து எடியூரப்ப பதவியேற்பதற்கு தடையேதும் இல்லாததால் இன்று காலை அவர் கர்நாடக முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|