கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 16, 2018, 08:30 [IST] கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொண்டமோடுலு என்ற மலைகிராமத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு, நேற்று (15-05-208) மாலை ஒரு தனியார் படகில் 55 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் திருமணத்துக்காக சென்றனர். படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மலைவாழ் மக்கள். தேவிபட்டினம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியது. இதில் தட்டுத்தடுமாறிய படகு, திடீரென ஆற்றில் கவிழ்ந்ததது. படகில் இருந்த 15 பேர் நீச்சல் அடித்து கரையேறினார். மீதமிருந்த 40 பேர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து, தகவல் அறிந்த தேவிப்பட்டினம் போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 23 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில், அனுமதியில்லாமலும் கூடுதலாக 7 பயணிகளுடனும் படகு இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேவிப்பட்டினம் போலீசார் படகு உரிமையாளர் காஜாவை கைது செய்தனர். கடந்த 11ம் தேதி கோதாவரி ஆற்றில் சென்ற தனியார் படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|