காவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 14, 2018, 13:45 [IST] மத்திய நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். வரைவு திட்டத்தில் என்ன குறிப்பிட பட்டு உள்ள விவரம் வருமாறு:- - உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் என மொத்தம் 10 பேர் இருப்பர். - அக்குழுவில் நீர் வளத்துறை செயலாளரும் ஒருவராக இடம்பெறுவார் - குழு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை - 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர் - குழுவின் அடிப்படை பணிகளுக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும் - குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும். - காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன? - நீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும். - நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும். - உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம் குழுவுக்கு அளிக்கப்படும். நீர் திறப்பு காலங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். - தேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குழுக்களை அமைத்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|