டெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 13, 2018, 20:45 [IST] டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதிப் புயல் தாக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது. இன்று மாலை தில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புழுதிப் புயலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு வரவேண்டிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டன. ஸ்ரீநகரிலிருந்து தில்லி வந்த விமானம் அமிர்தசரஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. அதே போல் மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காசியாபாத்திலும் புழுதிப் புயல் வீசியதால் நகரமே இருண்டு காணப்படுகிறது. உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஹிமாலயா மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|