திண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 12, 2018, 13:30 [IST] திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டி.எம்.டி. தங்கும் விடுதியில் கடந்த 10-ம் தேதி காலை பிரசாந்த் (27) என்ற இளைஞர், பாலாமணி (35) என்ற பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். அறையினுள் சென்ற இருவரும் கதவை பூட்டிக் கொண்டு, வெளியே வராமல் இருந்துள்ளனர். நேற்றும் வெளியே வரவில்லை. இன்று காலை சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில் வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே பிரசாந்த் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். குளியல் அறையில் பிரசாந்துடன் தங்கியிருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசாந்த் விடுதியில் தங்க வந்த போது முகவரியில் நிலக்கோட்டை கொங்கர்குளம் என கொடுத்துள்ளார். இந்த முகவரி உண்மைதானா என்பது குறித்தும், அவ்விருவரின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|