மே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 12, 2018, 07:50 [IST] ஊதிய விகித மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 30, 31 ஆகிய இரு தினங்களுக்கு நாடு முழுதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பொதுத் துறை வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக்கடன் கட்டாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும், வாராக்கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்கள் கட்ட வேண்டிய வாராக்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் எழுப்பியுள்ளனர். வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. நவம்பர் மாதத்தில் இருந்து புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வாராக்கடனை காரணம் காட்டி, 2 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. ஆனால், வங்கி ஊழியர் சங்கங்கள் இதனை ஏற்கவில்லை.இதுதொடர்பாக, கடந்த 5ம் தேதி மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே மே 30ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை, 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தேசிய வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி சேவை தொடர்பான பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களும் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் தனியார் மற்றும் அரசு வங்கிகளைச் சேர்ந்த பத்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|