தமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 10, 2018, 10:20 [IST] மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், சரக்குகளை எடுத்துச் செல்ல, 'ஆன்லைன்' மூலம் அனுமதி பெறும், இ - வே பில், நாடு முழுவதும் ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது. மாநிலத்துக்கு உள்ளேயே, சரக்குகளை எடுத்துச் செல்ல, இ - வே பில் பெறும் முறை, நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை, 18 மாநிலங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஜூன் 1 முதல் அனைத்து மாநிலங்களும், மாநிலங்களுக்கு உள்ளேயே இ - வே பில் முறையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது ஜூன் 3ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில், ஜூன் 2ம் தேதி முதல், மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இ - வே பில் பெறும் முறை நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இதன் பின், தமிழகத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கும், கண்டிப்பாக இ - வே பில் பெறுவது அவசியமாகும். இ - வே பில் பெற்றதை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும், 45க்கும் மேற்பட்ட ரோந்து குழுக்கள் செயல்படுகின்றன.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|