பல்சுவை இணைய இதழ்
  


டெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 09, 2018, 07:15 [IST]

புதுதில்லி: டெல்லியில் திடீரென ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.

தெற்கு டெல்லியின் ஷேக் சராய் என்கிற இடத்தில் நேற்று அதிகாலை நின்றுக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆம்புலன்ஸில் இருந்து உடல் கருகிய நிலையில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவர் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் ஆம்புலன்சை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிக்கொண்டிருந்ததும், அப்போது தீப்பிடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு ஆம்புலன்ஸில் பிடித்த தீ, புழுதி புயலால் கொழுந்துவிட்டு எரிந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பரவியது. அந்த வாகனங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.

தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் ஆம்புலன்ஸில் கொசுவர்த்தி சுருள் எரிந்து கொண்டிருந்த நிலையில் புழுதி புயல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினரை, முதல்வர் மெஹபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மெகபூபா முப்தி கூறும் போது, "என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, இது மிகவும் வருத்தமாக இருக்கிறது." என்றார்.

பிற செய்திகள்










நினைவுப் பாதை
ஆசிரியர்: நகுலன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 190.00
தள்ளுபடி விலை: ரூ. 175.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)