காஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 08, 2018, 15:00 [IST] காஷ்மீரில் சில நாட்களுக்கு முன்னர் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர பொதுமக்களில் ஒருவர் இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்ரீநகரின் புறநகர் நர்பால் பகுதியில் நேற்று (07-05-2018) போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் திருமணி (22) குடும்பத்துடன் சுற்றுலா பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது நேற்று ஸ்ரீநகரில் இருந்து குல்மார்க் பகுதிக்கு சென்றார். அப்போது நர்பால் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் திருமணி பயணித்த வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் திருமணி தலையில் படுகாயம் அடைந்தார். பாதுகாப்புப் படையினர் அவரை ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினரை, முதல்வர் மெஹபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மெகபூபா முப்தி கூறும் போது, "என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, இது மிகவும் வருத்தமாக இருக்கிறது." என்றார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|