சென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 07, 2018, 14:55 [IST] நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் நீண்ட காலமாக தேடி வந்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராக்கெட் ராஜாவை கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த வடக்கு பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சுந்தர் (31), பிரகாஷ் (25), மேற்கு தாம்பரம் சாஷசாய் நகரைச் சேர்ந்த நந்த குமார் (43), பாளையங்கோட்டை திருநகர் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ராஜ் சுந்தர் (23) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி காலை பாளை அண்ணா நகரில் உள்ள குமார் வீட்டில் ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. குமாரின் மருமகனான, நெல்லை பொறியியல் கல்லூரி பேராசிரியரான செந்தில்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இதில் குமார் உயிர் தப்பினார். இந்த வழக்கில் நெல்லையை சேர்ந்த ராக்கெட் ராஜா, அவரது சகோதரர் வக்கீல் பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டார்கள். ராக்கெட் ராஜா, பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் போலீசார் தேடி வந்தனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|