நெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 07, 2018, 09:35 [IST] நெல்லை மாவட்டம் விஜயநாரயணத்தில் உள்ள காவல் நிலைய காவலர் (தனிப்பிரிவு) ஜெகதீஷ் பரப்பாடியில் இரவு ரோந்து பணிக்கு சென்றார். மணல் கொள்ளை குறித்து விசாரிக்கச் சென்ற காவலர் ஜெகதீசன் திரும்பாததால் சக காவலர்கள் அவரைத் தேடினர். அப்போது அவர் மணல் கொள்ளை நடைபெறும் இடம் அருகே தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். நம்பியாற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிவந்த டிராக்டரை ஜெகதீசன் வழிமறித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஜெகதீஷை வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். மணல் திருட்டை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், காவலர் ஒருவரே அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|