ஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 22:10 [IST] ஆப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் சுமார் 150 இந்திய பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் சிலர் அருகிலுள்ள பாக்-இ-ஷாம்ல் என்ற பகுதியிலுள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு சிற்றுந்தில் சென்றுக்கொண்டு இருந்தனர். சிற்றுந்தை வழிமறித்த ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் சிலர், பேருந்தி ஓட்டுநர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 6 மின் பொறியாளர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றனர். இந்த தகவலை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆப்கனில் இந்திய பொறியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக ஆப்கன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|