நீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 17:00 [IST] மருத்துவ இடங்களுக்கான நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தே்ாவு இன்று (06-05-2018) நடைபெற்றது. தேர்வு மையத்தை கூட தமிழகத்தில் அமைக்க இயலாத, கையாலாகாதா மத்திய இடைநிலை கல்வி வாரியத்தினால் (சிபிஎஸ்இ), தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் கேரளா, கா்நாடகம், ஆந்திரா, சிக்கிம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தோ்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். கேரளா, எர்ணாகுளத்திற்கு நீட் எழுத தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் சென்றிருந்தார். மகனை அனுப்பி வைத்து விட்டு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகிலுள்ள எர்ணாகுளம் சிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமலேயே தமிழகம் எடுத்து வரப்படுகிறது. கிருஷ்ணசாமி உடலை எடுத்து வரும் ஆம்புலன்சுக்கு தமிழக எல்லை வரை கேரள போலீசாரும், பின்னர் தமிழக போலீசாரும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். கிருஷ்ணசாமி மனைவியிடம் தொலைபேசி மூலம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|