அரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 08:05 [IST] அரக்கோணம் ரயில் பணிமணியில் பல்வேறு பொறியியல் பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகின்றன. முக்கியப் பணிகள் தற்போது நடைபெறுவதை அடுத்து விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், மின்சார ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிடப்பட்ட அறிவிப்பில், கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: சென்னை சென்டரல் - மைசூர் செல்லும் சதாப்தி ரயில் (12007 & 12008) இரு மார்க்கத்திலும் கோவை - சென்னை சென்ட்ரல் செல்லும் சேரன் விரைவு ரயில் (12674) கோவை - சென்னை சென்ட்ரல் கோவை விரைவு ரயில் (12675 & 12676) இரு மார்க்கத்திலும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் (16057 திருப்பதி - சென்னை சென்ட்ரல் மெட்ராஸ் விரைவு ரயில் (16054) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089 & 16090) ரயில் இரு மார்க்கத்திலும் மதுரை - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (20602) ஆகிய 10 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் (56002) அரக்கோணம் - செங்கல்பட்டு- அரக்கோணம் பயணிகள் ரயில் (56003) அரக்கோணம் - செங்கல்பட்டு- அரக்கோணம் பயணிகள் ரயில் (56005) அரக்கோணம் - காட்பாடி- அரக்கோணம் பயணிகள் ரயில் (56007) அரக்கோணம்- வேலூர் அரக்கோணம் பயணிகள் ரயில் (56009) அரக்கோணம் - கடப்பா - அரக்கோணம் பயணிகள் ரயில் (56011) அரக்கோணம் - வேலூர் - அரக்கோணம் பயணிகள் ரயில் (56013) சென்னை கடற்கரை - வேலூர் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (66017) சூலூர் பேட்டை - மூர்மார்க்கெட் பயணிகள் ரயில் (66036) நெல்லூர் - சூலூர்பேட்டை பயணிகள் ரயில் (66038) திருப்பதி - அரக்கோணம் பயணிகள் ரயில் (66015) அரக்கோணம்-திருப்பதி பயணிகள் ரயில் (66039) ஆவடி - மூர் மார்க்கெட் பயணிகள் ரயில் (66002) திருப்பதி- நெல்லூர் பயணிகள் ரயில் (66033) மூர் மார்க்கெட் - ஆவடி பயணிகள் ரயில் (66005) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது: சென்னை - கோயம்புத்தூர் சதாப்தி விரைவு ரயில் : ஞாயிறு 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில்: ஞாயிறு 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - ஞாயிறு1.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் பெங்களூரு- சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - ஞாயிறு 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் டபுள் டெக்கர் விரைவு ரயில் - ஞாயிறு 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு ரயில் -ஞாயிறு 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் மும்பை சி.எஸ்.டி., காச்சிகுடா-செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் எழும்பூர் தாதர் எக்ஸ்பிரஸ், சில்சார்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், டேராடூன் மதுரை எக்ஸ்பிரஸ், தஷ்பாத்- ஆலப்புழா, பாட்னா, எர்ணாகுளம் ஆகிய ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|