2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 04, 2018, 21:50 [IST] ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடும். அடுத்த 2 அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) விளையாடும். முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஐபிஎல் போட்டியில் 2ம் இடம் பிடிக்கும் நகருக்கு அடுத்த வருட பிளே ஆஃப் போட்டிகளை (2வது மற்றும் 3வது ஆட்டங்கள்) நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அடிப்படையில் முன்னர் இந்த போட்டிகள் புனேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால், தற்போது புனேவுக்கு வழங்கப்பட்ட பிளே ஆஃப் ஆட்டங்கள் இரண்டும் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதி செய்துள்ளார். மே 23 மற்றும் 25 தேதிகளில் கொல்கத்தாவில் இந்த பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். முதல் பிளே ஆஃப் ஆட்டம் மே 22ல் மும்பையில் நடைபெறும். இறுதிப்போட்டி மும்பையில் மே 27 அன்று நடைபெறும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|