வட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 03, 2018, 16:10 [IST] நேற்று புதன்கிழமை மாலை முதல் வட இந்தியாவின் பல மாநிலங்களை புழுதிப் புயல் தாக்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உத்தரபிரதேசத்தில் 64 பேரும், ராஜஸ்தானில் 33 பேரும், உத்தராகாண்ட், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 2 பேரும் பலியாகியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 64 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் தான் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 43 பேர் பலியாகியுள்ளனர்.ஆக்ராவில் இரவு 8.45 முதல் 11:30 வரை மழை பெய்தது. அப்போது 126 கிமி/மணி வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ராஜஸ்தானில் அல்வார், தோல்பூர், பாரத்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு புழுதி புயல் தாக்கியது. இதில் சிக்கி 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புழுதி புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தானில் புழுதிப் புயலில் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.60 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|