கென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 01, 2018, 21:35 [IST] ஏப்ரல் மாதம் முதல் கென்யாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் வடக்கு மற்றும் மத்திய கென்யாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவாலும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மழை மற்றும் நிலச்சரிவுக்கு சுமார் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வரை வீடிழந்துள்ளனர். தண்ணீர் மூலம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிக அளவில் மீட்புப் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். மேலும் உணவு, குடிநீர் போன்ற நிவாரண உதவிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. எனவே தேசிய பேரழிவு மேலாண்மை நிதியம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புவி வெப்பமடைதலால் உண்டாகும் பருவ நிலை மாற்றத்தினால் இயற்கைச் சீற்றங்கள் ஆப்பிரிக்க நாடுகளை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதனால் வருடாவருடம் பெருத்த சேதம் ஏற்படுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|