விருத்தாச்சலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 30, 2018, 10:45 [IST] கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வி.சாத்தமங்கலம் பகுதி மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நேற்றிரவு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான பிரசாதத்தை பக்தர்கள் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக மயக்கமடைந்து கீழே விழ தொடங்கினர். பலருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் விருத்தாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்னதானத்தினால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. உணவு தயாரிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்திருக்கலாம் என்றும், கவனக்குறைவால் பூச்சிகள் ஏதேனும் உணவில் விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
|
அமிர்தம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஏப்ரல் 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-8682-090-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின் முதல் நாவல் என்ற தகுதியை மீறி அவரது பிந்திய நாவல்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது என்ற பெருமையும் இந்த நாவலுக்கு உண்டு. ஆண் - பெண் உறவில் சக மதிப்பு, பரஸ்பர விழைவு, பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலைச் சித்திரிப்புகளுடன் தஞ்சை வட்டார மொழி, கிராமியப் பின்னணி, இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பிற்கால நாவல்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை ‘அமிர்த’த்தில் காணலாம். கூறு மொழியால் பழையதாகத் தென்பட்டாலும் பேசு பொருளால் என்றும் புதிதாகத் தொனிக்கும் நாவல் இது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|