மெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 28, 2018, 20:35 [IST] காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரம் இருக்க அனுமதிக்கக் கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை, கடந்த சில வாரங்களாக நடந்துவந்தது. இந்நிலையில், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திட வேண்டும் எனவும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரியதால் தான் நாங்கள் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல. மேலும் தீர்ப்பு குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்காததால் உடனடியாக நாளையே போராட்டம் நடத்தப்போவதில்லை. எங்களுக்கு 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி தீர்ப்பை எதிரித்து மேல் முறையீடு செய்வோம்” என தெரிவித்தார். இந்நிலையில் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. போராட்டடம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று மாலை அவசர வழக்காக விசாரித்தது. நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் முதல்வர், துணை முதல்வர் கூட சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தான் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து தனி நீதிபதி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்த உத்தரவை, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் அமர்வு தடை விதித்தது. மேலும் அரசு அறிவித்த 3 இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து மனுதாரர் போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
|
ஆளண்டாப் பட்சி மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: டிசம்பர் 2016 பக்கங்கள்: 240 எடை: 300 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-81969-55-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ள லாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|