எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 28, 2018, 18:20 [IST] சில தினங்களுக்கு முன்னர் நடிகர் எஸ்.வி.சேகர், தனது டிவிட்டர் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வேறொருவரின் ஆபாச கருத்தை பகிர்ந்திருந்தார். பெண்கள் குறித்து ஆபாச கருத்தை பகிர்ந்து விட்டு பின்பு அதனை தெரியாமல் பகிர்ந்து விட்டேன் என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார் நடிகர் எஸ்.வி.சேகர். ஆனால் அவர் கருத்தை யாரும் நம்பவில்லை. இதற்கு பத்திரிகையாளர் மட்டுமின்றி பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல்வேறு நீதிமன்றங்களில் எஸ்.வி.சேகருக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எஸ்.வி.சேகரின் உறவினர் தமிழக தலைமைச் செயலாளராக இருப்பதால், தமிழக அரசும் இது குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையிலும், எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இரு தினங்களுக்கு முன் வந்த போது தமிழக காவல்துறையினர் பதில் மனு அளிக்க கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து இன்று 28-04-2018 விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது நீதிபதி, எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் எஸ்.வி.சேகர் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். கோடைக்கால நீதிமன்றத்தை அணுகுமாறு எஸ்.வி.சேகருக்கு நீதிபதி தனது தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார். கோடைக்கால நீதிமன்றம் மே மாதம் துவங்குமென்பதால் அதுவரை எஸ்.வி.சேகரை தற்சமயம் கைது செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் எஸ்.வி.சேகரின் உறவினர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமைச் செயலாளராக இருப்பதால், தமிழக அரசு எஸ்.வி.சேகரை கைது செய்யுமா என்பது கேள்விக்குறியே!
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|